கிரிக்கெட்

சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்க முடியாது: குஜராத் டைட்டன்ஸ் அறிவிப்பு!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எந்த அணியும் நடக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குஜராத்தில் இருந்து திடீரென தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பதில் மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா ஏலம் எடுக்க படுவார் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து சின்ன தல ரசிகர்களும் இணையதளங்களில் இது குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுக்க முடியாது என நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன/ ஜேசன் ராய் ஒரு தொடக்க ஆட்டக்காரர் என்றும் அவருக்கு மாற்றாக ரெய்னாவை சேர்ப்பது என்பது குறித்த பரிந்துரை செய்யவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது .

இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாட இருக்கிறார் என்று பரவிய செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version