இந்தியா

12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத குஜராத் மாணவி, நீட் தேர்வில் 705/720 மதிப்பெண்!

Published

on

அகமதாபாத்: குஜராத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவி, நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தேர்ச்சி பெறாதது எப்படி?

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி படி, இந்த மாணவி அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர். 12ஆம் வகுப்பு படிக்கும் போது, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பள்ளித் தேர்வில் இயற்பியல் – 21 மதிப்பெண், வேதியியல் – 31 மதிப்பெண், உயிரியல் – 39 மதிப்பெண், ஆங்கிலம் – 59 மதிப்பெண் என மொத்தம் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை.

நீட் தேர்வில் சாதனை!

பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்த மாணவி, நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இயற்பியல் – 99.8 சதவீதம், வேதியியல் – 99.1 சதவீதம், உயிரியல் – 99.1 சதவீதம் என மொத்தம் 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதன் மூலம், நீட் தேர்வில் குஜராத்தில் முதல் நிலை என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

குழப்பம் நிலவும் சூழ்நிலை

மாணவி 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோச்சிங் சென்டர் இயக்குநர் கூறுகையில், மாணவி படிப்பில் ஆர்வம் காட்டாததால் இரண்டு மாதங்களில் வகுப்பை விட்டு விட்டதாகவும், ஆனால் தனிப்படிப்பு மூலம் நீட் தேர்வுக்கு தயாரானதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவி 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், உயர் கல்விக்குத் தேவையான நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவது மருத்துவ கல்விக்கு கட்டாயம் என்பதால், மாணவி மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. இவரது பெற்றோர்கள் மருத்துவர்கள் என்பது கூடுதல் தகவல்.

Tamilarasu

Trending

Exit mobile version