கிரிக்கெட்

குஜராத் அதிர்ச்சி தோல்வி: 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர் கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் பில் சால்ட் ரன் எடுக்காமலும், கேப்டன் வார்னர் 2 ரன்னில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ரோசவ் 8 ரன், மனிஷ் பாண்டே 1 ரன், பிரியம் கார்க் 10 ரன் என ஷமியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 23 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி திண்டாடியது.

டெல்லி 130 ரன்கள்

6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அக்ஷர் பட்டேலும், அமன்கானும் ஜோடி சேர்ந்தனர். அக்ஷர் பட்டேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அமன்கான் ஐபிஎல்-ல் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அமன்கான் 51 ரன்களும், அடுத்து வந்த ரிபல் பட்டேல் 23 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 130 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. குஜராத் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், மொகித் ஷர்மா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

குஜராத் அதிர்ச்சி தோல்வி

131 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடியது குஜராத் அணி. விருத்திமான் சஹா 0, மாற்று ஆட்டக்காரர் சுப்மன் கில் 6 ரன், விஜய் சங்கர் 6 ரன்,டேவிட் மில்லர் 0 ஆகியோர் அணி 32 ரன்னை எட்டுவதற்குள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், அபினவ் மனோகரும் இணைந்தனர். மனோகர் தனது பங்குக்கு 26 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்ல ராகுல் திவேதியா, 19-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் அடுத்த 3 பந்துகளில் திவேதியா பிரமாண்டமான சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

ஆனால் அந்த ஹாட்ரிக் சிக்சருக்கு பலன் இல்லை. இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வீசினார். துல்லியமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா, திவேதியாவின் விக்கெட்டை எடுத்ததுடன், 6 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணிக்கு திரில்லிங்கான வெற்றியை தேடித் தந்தார். ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றும் பிரயோஜனம் இல்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 125 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

seithichurul

Trending

Exit mobile version