இந்தியா

குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது இந்த கட்சியா? ஆச்சரிய கருத்துக்கணிப்பு தகவல்!

Published

on

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து உள்ளதை அடுத்து இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி, பாஜகவை வீழ்த்த களமிறங்கியது என்பதும், ஆனால் அதே நேரத்தில் தனித்தனியாக இரு கட்சிகளும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து குஜராத் மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றவாறு இலவச பேருந்து, இலவச மின்சாரம் உள்பட பல சலுகைகளை ஆம் ஆத்மி கட்சி வாரி வழங்கியது என்பதும் அதனால் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 117 – 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் 34-51 தொகுதிகள் வரையிலும் ஆம் ஆத்மி 6 – 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒன்றை இலக்கங்களில் தான் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version