இந்தியா

தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்

Published

on

குஜராத் தொழிலில் அதிபர் ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூபாய் 2.69 கோடி வரை இளம்பெண் ஒருவர் மிரட்டி பெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலம் பல முறைகேடுகள் மோசடிகள் நடைபெற்று வருவதாக தினந்தோறும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் மூலம் தொழில் வர்த்தகம் குறித்து அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசினால் அது பெரிய ஆபத்தில் முடியும் என்று ஏற்கனவே பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இளம் பெண் ஒருவர் தான் எரிசக்தி துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் வணிகத்தை பெருக்க தனக்கு தன்னிடம் ஐடியா உள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னை ரியா சர்மா என்று அழைத்துக் கொண்ட அந்த பெண் தொழிலதிபரிடம் முதலில் தொழில் முறையாக பேசிய பின் அதன் பின் பர்சனலாக கொஞ்சும் வகையில் பேசி உள்ளார்.

இதனை அடுத்து அவரது அழகில் மயங்கிய தொழிலதிபர் அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் உங்களை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறேன், உங்கள் உடைய கழற்றுங்கள் என்று கூற இளம்பெண் கூற, தொழிலதிபரும் சற்றும் தயங்காமல் தனது உடைகளை கழற்றி உள்ளார்.

இந்த நிலையில் அவரது உரையாடலை முழுவதுமாக வீடியோ எடுத்து அந்த இளம் பெண் திடீரென இணைப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவருக்கு போன் செய்து உங்களது நிர்வாண வீடியோவை இணையதளங்களில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அந்த பணத்தை அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக அவரிடம் இருந்து மிரட்டல் வந்ததாகவும் ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் அவர் பணம் கேட்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் 80 லட்சம் வரை கேட்டுள்ளார். அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீடியோவை ஒளிபரப்பிவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் உங்கள் மீது கொலை வழக்கு பாயும் என்று மிரட்டி உள்ளார். இதனை இதனை அடுத்து அவர் அந்த பணத்தையும் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தொந்தரவு பொறுக்க முடியாமல் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை தான் 2.69 கோடி ரூபாய் ஏமாந்துள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 387 (பணம் பறித்தல்), 170 (அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 465 (போலி செய்தல்), 420 (ஏமாற்றுதல்), மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version