Connect with us

தமிழ்நாடு

வாரத்தில் 6 நாட்கள் பள்ளி: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

Published

on

schools

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:

* 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.

* வகுப்பில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

* வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும்.

* பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

* அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ப* ள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும்.

* அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

* மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.

* மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

* பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.

* பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!