தமிழ்நாடு

ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள்: கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published

on

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பள்ளிகளை அடுத்து தற்போது கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பிவருமாறு:

* ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடைபெறும்.

* இளங்கலை இரண்டாம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

* இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

* பொறியியல் படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தப்படும்.

* உயர் கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகள் திறக்க அனுமதி உண்டு. ஆனால் அதே நேரத்தில் உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்பட வேண்டும்.

* முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version