வணிகம்

ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு 1.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

Published

on

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 81,939 கோடி ரூபாயும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் 36,705 கோடி ரூபாயும், வசூல் மற்றும் பொருட்கள், மற்றும் அதன் தீர்வை வரியாக 857 கோடி ரூபாய் உட்பட) தீர்வைத் தொகையாக 10,649 கோடி ரூபாய் அடங்கும்.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையான 1,42,095 ரூபாயை விட 25,000 கோடி ரூபாய் அதிகம்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 33,423 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 26,962 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 20% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 30% அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 17% அதிகமாகும்.

ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மின்வழி சீட்டுகளின் எண்ணிக்கை 7.7 கோடியாகும். இது பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட 6.8 கோடி மின் – வழிச்சீட்டுகள் விட 13% அதிகமாகும், இது வணிக செயல்பாடுகளின் விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது.

இது வரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக,வரி செலுத்துவோரை சரியான நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான ஜி எஸ் டி நடைமுறைகளின் தெளிவான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தவறு செய்யும் வரி செலுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து 9,724 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,849 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாடு செய்து இருந்தது.

மாநிலம் வாரியாக ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

மாநிலம் ஏப்ரல் 2021 ஏப்ரல் 2022 வளர்ச்சி
ஜம்மு காஷ்மீர் 509 560 10%
ஹிமாச்சல பிரதேசம் 764 817 7%
பஞ்சாப் 1,924 1,994 4%
சண்டிகர் 203 249 22%
உத்தரகாண்ட் 1,422 1,887 33%
ஹரியானா 6,658 8,197 23%
டெல்லி 5,053 5,871 16%
ராஜஸ்தான் 3,820 4,547 19%
உத்தரப்பிரதேசம் 7,355 8,534 16%
பீகார் 1,508 1,471 -2%
சிக்கிம் 258 264 2%
அருணாச்சல பிரதேசம் 103 196 90%
நாகாலாந்து 52 68 32%
மணிப்பூர் 103 69 -33%
மிசோரம் 57 46 -19%
திரிபுரா 110 107 -3%
மேகாலயா 206 227 10%
அசாம் 1,151 1,313 14%
மேற்கு வங்காளம் 5,236 5,644 8%
ஜார்கண்ட் 2,956 3,100 5%
ஒடிசா 3,849 4,910 28%
சத்தீஸ்கர் 2,673 2,977 11%
மத்திய பிரதேசம் 3,050 3,339 9%
குஜராத் 9,632 11,264 17%
டாமன் மற்றும் டையூ 1 0 -78%
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 292 381 30%
மகாராஷ்டிரா 22,013 27,495 25%
கர்நாடகா 9,955 11,820 19%
கோவா 401 470 17%
லட்சத்தீவு 4 3 -18%
கேரளா 2,466 2,689 9%
தமிழ்நாடு 8,849 9,724 10%
புதுச்சேரி 169 206 21%
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 61 87 44%
தெலுங்கானா 4,262 4,955 16%
ஆந்திரப் பிரதேசம் 3,345 4,067 22%
லடாக் 31 47 53%
பிற பிரதேசங்கள் 159 216 36%
ஒன்றிய அரசு அதிகார வரம்பு 142 167 17%
மொத்தம் 1,10,804 1,29,978 17%
seithichurul

Trending

Exit mobile version