இந்தியா

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

Published

on

சண்டிகரில் இன்று நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அவற்றில் பல சாமானிய மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யும் பொருட்கள், பேக் செய்யப்படாதா தானியங்கள் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது.

விலை உயரும் பொருட்கள்

பேக் செய்யப்பட்ட பொருட்கள்

பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க, ஜிஎஸிடி கவுன்சில் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

செக் புக்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் செக் புக்குகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ஒட்டல் அறைகள்

தற்போது 1000 ரூபாய்க்கும் குறைவான ஓட்டல் அறைகளில் தங்க ஜிஎஸ்டி இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை படுக்கை கட்டணம்

மருத்துவமனைகளில் ஐசியூ இல்லாத சிகிச்சையின் போது படுக்கைக்கு 5000 ரூபாய் கட்டணம் என்றால் 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

எல்.ஈ.டி பல்பு

எல்.ஈ.டி பல்பு மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கத்தி, ஸ்பூன்

கத்தி, ஸ்பூன், பென்சில் ஷாப்னர், பிளேட் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்வு.

தண்ணீர் மோட்டார்கள்

தண்ணீர் இழுக்கும் மோட்டார்கள், சைக்கிள் பம்ப் போன்ற பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

விலை குறையும் பொருட்கள்

ரோப்வே சவாரிகள்

ரோப்வே சவாரிகள் கட்டணம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு வண்டி வாடகை

சரக்கு வண்டி வாடகை கட்டணம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எலும்பியல் உபகரணங்கள்

எலும்பியல் சிகிச்சை உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சாதனங்கள்

பாதுகப்பு துறைக்காக இறக்குமதி செய்யப்படும் பாதுகப்பு சாதனங்கள் மீதான ஒருங்கினைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version