சினிமா

நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கம்: ஜிஎஸ்டி துறை அதிரடி!

Published

on

பிரபல நடிகர் மகேஷ் பாபு சேவை வரி கட்டாததால் அவரது இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது ஜிஎஸ்டி துறை.

கடந்த 2007-08-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வந்த நடிகர் மகேஷ் பாபு, அதற்கான சேவை வரி எதனையும் கட்டவில்லை. 18.5 லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய சேவை வரிக்கு தற்போது வட்டி, அபராதம் என ரூபாய் 73.5 லட்சத்தை வசூலிக்க உள்ளது ஜிஎஸ்டி துறை. இதற்காக அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது ஜிஎஸ்டி துறை.

மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து 42 லட்சம் ரூபாயை பெற்றிருக்க்கும் ஜிஎஸ்டி துறை மீதித் தொகையை அவரது ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து எடுக்க உள்ளது. இதனை அந்த வங்கி தர மறுத்தால் வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மகேஷ் பாபு முழுத் தொகையையும் செலுத்திய பின்னர் தான் அவரது வங்கி கணக்குகள் இயங்கும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version