வணிகம்
ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்.. எவ்வளவு தெரியுமா?
கொரொனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டு எழுந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல், இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட ஜிஎஸ்டியின் கீழ் முதல் முறையாக 2020 டிசம்பர் மாதம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி ரூபாய் வரி வசூல் ஆகியுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 12 சதவீதம் அதிகம்.
கொரொனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டு எழுந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.
அதில் 21,365 கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி. 27,804 கோடி ரூபாய் மாநில ஜிஎஸ்டி. செஸ் வரி 8,579 ரூபாய். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 57,426 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.