இந்தியா

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு என தகவல்!

Published

on

புவி கண்கானிப்பிற்காக இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்.10 என்ற ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, செயற்கைக்கோள் ஆகியவைகளை இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. வணிகரீதியான வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன செயற்கைகோளை தயாரித்த இஸ்ரோ, இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது நிலையில் இன்று அதிகாலை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் இந்த செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் மூன்றாவது நிலை சென்ற நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் செயற்கைக்கோளை கொண்டு செல்லும் ராக்கெட் இலக்கை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் கோளாறு என தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் ஏவும் திட்டம் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று ஏவப்பட்டது என்பதும் ஆனால் இன்று ஏவப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2268 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட்டின் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் என்றும் இதில் உள்ள ஐந்து விதமான 3டி கேமராக்கள் புவிப்பரப்பை மிகவும் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்றும் இதன் மூலம் வானிலை நிலவரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட நிலையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் கிரையோஜெனிக் இன்ஜினின் ஏற்பட்ட கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version