உலகம்

‘உனக்கும் எனக்கும் பகை பகைதான்!’- அதிபர் பதவியிலிருந்து விலகினாலும் டிரம்பை விடாமல் துரத்தும் கிரெட்டா

Published

on

உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச்சூழப் பாதுகாப்பு குறித்து ஆற்றிய உரை, உலக வைரலானது. அதுவே அவரைப் பலராலும் கவனிக்க வைத்தது.

இப்படி சுற்றுச்சூழலுக்காக கிரெட்டா, ஒரு பக்கம் செயலாற்றிக் கொண்டிருந்தாலும், அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், அவரை கலாய்த்து தள்ளினார்.

குறிப்பாக டிரம்ப், ‘கிரெட்டா ஒரு நல்ல இளம் பெண் போலத்தான் தெரிகிறாள். அவள் இப்படியெல்லாம் கோபப்படுவதை விட்டுவிட்டு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் சினிமா பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்’ என்றார்.

இதனால், உஷ்ணமடைந்த கிரெட்டா, அவ்வப்போது டிரம்பை அவர் பாணியிலேயே கேலி செய்து வந்தார். 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு கிரெட்டா ஆதரவு தெரிவித்திருந்தார். இப்படி டிரம்புக்கு எதிராக செயல்பட்டு வந்த கிரெட்டா, அமெரிக்க அதிபராக அவரின் கடைசி நாளன்றும் ட்ரோல் செய்து இணையத்தைத் தெறிக்க விட்டுள்ளார்.

‘டிரம்பைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியான வயதான மனிதர் போல தெரிகிறார். தன் பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை அவர் எதிர்நோக்குவது போல தெரிகிறது. இதைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என்று வஞ்ச புகழ்ச்சியோடு கிரெட்டா ட்விட்டரில் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும் படத்துன் பதிவிட்டுள்ளார். இதுவும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version