இந்தியா

இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம்- க்ரெட்டா தன்பர்க்!

Published

on

இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம் என சர்வதேச சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் ஆதரவு அளித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020 நவம்பர் 26-ம் தேதி உச்சம் பெற்ற போராட்டத்தில் இது நாள் வரையிலும் தொடர்ந்து வருகிறது.

இடையில் போராடும் விவசாயிகளின் சங்கத்தினர் உடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து பயனளிக்காமல் வீழ்ந்து வருகிறது. இந்த சூழலில் இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு சமீப காலமாக சர்வதேச கவனம் கிடைக்கப்பெற்று வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஹாலிவுட் நடிகை மியா கலிஃபா, ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகி ரிஹானா ஆகியோர் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்துப் பேசி உள்ளனர்.

மேலும், தற்போது ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச சுற்றுச்சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் இந்தியா விவசாயிகளுக்கு துணை நிற்போம் எனக் கூறி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார். சர்வதேச அளவில் இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைக்கும் கமென்ட்களுக்கு இன்று இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் எதற்காக போராட்டம் நடக்கிறது? என்ன பிரச்னை? என எந்த பின்னணியும் தெரியாமல் எவ்வித புரிதலும் இல்லாமல் யாரும் கமென்ட் செய்ய வேண்டாம்”என்பது போல அந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version