கிரிக்கெட்

இகழ்வது போல் புகழ்ந்த கிரேக் சாப்பல் – கோலி கொடுத்த அல்டிமேட் ரிப்ளை!

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல், விராட் கோலியை இகழ்வது போல புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதற்கு கிங் கோலி அசத்தலான ரிப்ளை கொடுத்துள்ளார்.

முன்னதாக சேப்பல், ‘விராட் கோலிதான் எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியராக இல்லாமல், ஒரு ஆஸ்திரேலியரைப் போல கிரிக்கெட் விளையாடுகிறார்’ என்று கூறினார். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் கிரிக்கெட் களத்தில் செயல்படக் கூடியவர்கள். கோலி, அப்படி செயல்படுவதைத்தான் சாப்பல் பாராட்டியுள்ளார்.

இது பற்றி கோலி, ‘நான் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அப்படித்தான் என்னை நான் நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய முதல் நாளிலிருந்து நான் இப்படித்தான் இருக்கிறேன். என்னை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரோடு ஒப்பிட்டாலும் ஒப்பிடா விட்டாலும் நான் இப்படித்தான். இந்திய வீரர்கள், எப்படி சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பது என் மூலமாக உலகம் பார்க்கிறது.

புதிய இந்தியாவில் வீரர்கள், அனைத்து சவால்களையும் வலிந்து எடுத்துக் கொள்கிறோம். நேர்மறையாகவும் உற்சாகத்துடனும் அதை அணுகுகிறோம். எங்கள் பாதையில் எவ்வித சவால்கள் வந்தாலும் ஒரு கை பார்த்துவிட நாங்கள் தயார்’ என்று உற்சாகம் ததும்ப கூறியுள்ளார் கோலி.

 

Trending

Exit mobile version