சினிமா செய்திகள்

’பாகுபலி 2’ படத்துடன் கனெக்சன் ஆகும் சிம்புவின் ‘மாநாடு’

Published

on

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘மாநாடு’திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை அமெரிக்காவில் திரையிடும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சிம்புவின் ‘மாநாடு’திரைப்படத்தை அமெரிக்காவில் கிரேட் இந்தியா பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ’பாகுபலி 2’ படத்தை அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’ படத்தையும் இதே நிறுவனம் தான் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்நிறுவனம் அமெரிக்காவில் ‘மாநாடு’திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதை அடுத்து மிகப்பெரிய அளவில் புரொமோஷன் நடத்தும் என்றும் அதனால் இந்த படம் அமெரிக்காவில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ‘மாநாடு’ படத்தை திரையிட அமெரிக்காவில் பல திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Trending

Exit mobile version