சினிமா செய்திகள்

Grammy 2023: மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார் இந்தியாவின் ரிக்கி கெஜ்..!

Published

on

பிரபலமான இசை விருதுகளில் ஒன்றான 65வது ஆண்டு கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிப்டோ.காம் அரங்கில் இன்று நடைபெற்றது.ட்ரெவர் நோவா விழாவின் தொகுப்பாளராக திரும்பினார். டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸ் போன்ற பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்

அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த இம்மர்சிவ் ஆடியோ ஆல்பம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இவரது ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம் விருதை பெற்றது. இந்த விருதை ராக் இசை லெஜண்ட் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் சேர்ந்து வென்றார் ரிக்கி கெஜ்.

உலகெங்கிலும் உள்ள கலைஞர்களைக் கொண்ட ‘டிவைன் டைட்ஸ்’, இயற்கை உலகின் மகத்துவத்திற்கான சமர்ப்பணமாக கருதுகின்றார் கெஜ். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த ஆல்பத்தில் 9 பாடல்கள் மற்றும் 8 இசை வீடியோக்கள் உள்ளன, அவை இந்திய இமயமலை முதல் ஸ்பெயினின் பனிக்காடுகள் வரை உலகம் முழுவதும் உள்ள இயற்கையின் அழகை வெளிபடுத்துகிறது.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு விண்டஸ் ஆஃப் சம்சாரா என்ற பாடலுக்காகவும், 2022 ஆம் அண்டு சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காகவும் அவர் இந்த விருதை வென்றுள்ளார். மூன்று முறை கிராமி வென்று அசத்திய ரிக்கி கெஜுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிராமி விருதை வென்ற நான்கு இந்தியர்களில் இவரே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version