சினிமா செய்திகள்

இனிமேல் யாராவது என்னை ‘குண்டுன்னு’ கலாய்ப்பீங்க? கிரேஸ் கருணாஸின் அதிரடி பதிவு!

Published

on

நடிகர் கருணாஸ் மனைவியும் பாடகியுமான கிரேஸ் கருணாஸை குண்டு என அவ்வப்போது சக கலைஞர்களும் ரசிகர்களும் கலாய்த்து வந்த நிலையில் ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் அந்த கலாய்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாடகி கிரேஸ் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளராக உள்ளார் என்பதும் அவரது சமையல் மற்றும் காமடி சிறப்பாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இதற்கு முன் அவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி களில் அவரது குண்டான உடலை வைத்து கேலி செய்து பலரும் காமெடி செய்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டுகொள்வதில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் கிரேஸ் தனது இன்ஸ்டாகிராமில் தான் இளமையாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் கிரேஸ் கருணாஸ் ஒல்லியாக இருப்பது அடுத்து இனிமேல் என்னை யாராவது ‘குண்டுன்னு’ கலாய்ப்பீங்க? என அமைதியாக தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளதாகவே தெரிகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

 

Trending

Exit mobile version