வணிகம்

2018 அக்டோபர் – டிசம்பர் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதம் 8% ஆக உயர்வு!

Published

on

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக இருந்த நிலையில் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு 8 சதவீதமாக அறிவித்துள்ளனர்.

ஜிபிஎப் மீதான வட்டி விகித உயர்வினால் மத்திய அரசு, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

சென்ற மாதம் மத்திய அரசு தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎப் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 8 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version