சினிமா செய்திகள்

‘இதெல்லாம் சன்னி அக்கா பார்த்த என்ன நினைப்பாங்க’- புலம்பும் ஜிபி முத்து

Published

on

ஜிபி முத்து நடிகை சன்னி லியோன் உடன் இணைந்து நடிப்பது குறித்து நெட்டிசன்கள் கேலி செய்து வருவதற்குப் பதில் அளித்துள்ளார் ஜிபி முத்து.

நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படம் ஒரு காமெடி- த்ரில்லர் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சசிகுமார் உடன் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னர் வெளியாகி இருந்தது. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வடகறி என்னும் படத்தில் சன்னி லியோன் நடித்து இருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் சசிகுமார் மூலம் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தற்போது டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து நடிக்கிறார். சசிகுமார் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து நடிக்க உள்ளாராம். அதனால், சன்னி லியோன் மற்றும் ஜிபி முத்து ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஜிபி முத்து ரசிகர்களால் வைரலாகப் பரவி வருகிறது. நெட்டிசன்களும் சன்னி லியோன் – ஜிபி முத்துவை இணைத்து பல மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ்கள் என அதிகப்படியாக பரப்பி வருகின்றனர். இதைப் பார்த்த ஜிபி முத்து தனது வீடியோவில் இதற்கு ரியாக்ட் செய்திருக்கிறார்.

‘இதையெல்லாம் சன்னி அக்கா பார்த்த என்னலே நினைப்பாங்க?’ என்பது போல் ஜிபி முத்து கேட்ட கேள்வியும் தற்போது வைரல் ஆகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version