வணிகம்

அரிசி உபரியிலிருந்து எத்தனால் எடுத்து சானடைசர் தயாரிக்க அரசு முடிவு!

Published

on

மத்திய அரசு இந்திய உணவு கழகத்திடம் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் எடுத்து, அதன் உதவியுடன் சானடைசர் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

சானடைசர் மட்டுமல்லாமல், அரிசியிலிருந்து எடுக்கப்படம் எத்தனால் பெட்ரோலிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்திய உணவு கழகத்திடம் 3 கோடியே 97 லட்சம் டன் அரிசி இருப்பில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதே சமயம், ஏழைகளின் உணவு தேவையான அரிசியை எத்தனால் மற்றும் பெட்ரோலுக்காக பயன்படுத்துவதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version