இந்தியா

டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ரூ.5.03 லட்சம் கோடி என்பது என்ன?

Published

on

இன்று அதிகாலை முதல் டுவிட்டரில் ரூ.5.03 லட்சம் கோடி என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவிலும் பொருளாதாரம் பின்னடைவில் உள்ளது. இந்த பின்னடைவில் இருந்து இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு வெளிநாட்டு வங்கியிடம் கடன் பெறப் போவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க மீட்கவும், வருவாய் இழப்பை ஈடுகட்டவும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற போவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குவது கருத்தில் கொண்டும் இந்த கடன் வாங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 5.03 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ள தகவல்தான் தற்போது டுவிட்டரில் கசிந்து ட்ரெண்டை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version