தமிழ்நாடு

சரியும் மாணவர்களின் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்ததை அடுத்து தமிழகத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 1412 பேர்கள் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும் குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். கரூர் புதுக்கோட்டை உள்பட ஒருசில மாணவர்கள் மாவட்டங்களில் ஒரு அரசு பள்ளி மாணவர் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வில்லை என்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு குறித்த பயம் காரணமாகவே அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க வில்லை என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version