வணிகம்

அதானி குழுமத்தில் எல்ஐசி மட்டுமல்ல இந்த 5 அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன தெரியுமா?

Published

on

அதானி குழுமத்தில் எல்ஐசி மட்டுமல்லாமல் 5 பொதுத் துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே.

அதான் குழுமத்தின் பங்குகள் சரிந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் எல்ஐசி 300 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதானி குழுமத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்களும் 348 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளன என மக்களவையில் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் செய்துள்ள பங்குகளின் மதிப்பு அவரது சொத்து மதிப்பில் 0.14 சதவிகிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version