இந்தியா

இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் மத்திய அரசு.. சமையல், சிஎன்ஜி எரிவாயு, உரம் விலை 11% உயர வாய்ப்பு!

Published

on

மத்திய அரசு வியாழக்கிழமை இயற்கை எரிவாயு மீதான விலையை 62 சதவீதம் உயர்த்தியுள்ளது. இயற்கை எரிவாயு மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி, சமையல் எரிவாயு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்படுகிறது.

இதனால் ஆட்டோ மற்றும் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு, பைப் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை போன்றவை 10 முதல் 11 சதவீதம் வரை உயரும் என பூமிடுடே கணிப்புகள் கூறுகின்றன.

மின்சாரம் உற்பத்திக்கும் இது பயன்படுத்தப்படுவதால் அதுவும் உயரும். விவசாயம் செய்யப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலையும் உயரும். இதனால் அத்தியாவசிய உணவுகளின் விலைகளும் உயரும்.

கொரோனா முதல் அலையின் போது இயற்கை எரிவாயும் விலை பெரும் அளவில் சரிந்தது. ஆனால் இப்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version