இந்தியா

குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது.. மத்திய அரசு!

Published

on

குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயம் ஆக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.

அந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2000-ம் ஆண்டில் தேசிய மக்கள் கொள்கை உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 2017-ல் தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது.

இதனால் குழந்தை பிறப்பு விகிதம் 3.2 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே கடும் கட்டுப்பாடு விதிக்க அவசியமில்லை.

மேலும் சுகாதாரத் துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதில் ஆலோசனைகளை மட்டுமே மத்திய அரசால் வழங்க முடியும். 1994 மக்கள் தொகை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின் படி, யாரும் இத்தனை குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version