தமிழ்நாடு

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: தொடங்கும், முடியும் தேதி அறிவிப்பு!

Published

on

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தரவரிசை பட்டியல் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள 143 அரசு மற்றும் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து சற்றுமுன் கல்லூரிக் கல்வி இயக்ககம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழை சரிபார்த்த பின்னரே மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர பிளஸ் டு முடித்த மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version