சினிமா செய்திகள்

ஜேம்ஸ்கேமரூனுக்கு இப்படியொரு உதவி செய்தாரா கோவிந்தா?

Published

on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது. தற்போது தான் அந்த பாக்ஸ் ஆபிஸ் ரெகார்டை அரும்பாடுபட்டு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடித்தது.

இந்நிலையில், அவதார் படத்திற்கான தலைப்பை தான் தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு கொடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

மேலும், அந்த படம் எடுக்க 7 வருடங்கள் ஆகும் என தான் சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும், கோவிந்தாவை நடிக்க ஜேம்ஸ் கேமரூன் அழைத்தும் தன்னால் உடல் முழுக்க மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க முடியாது என மறுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அவதார் படத்தில் யாரும் உடல் முழுக்க மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்கவில்லை, அப்படி இருக்க கோவிந்தாவின் கூற்று உண்மையா? அல்லது பொய்யா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கு ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளிவரும்.

அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் 2021ம் ஆண்டு முதல் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version