இந்தியா

ஆளுநர் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

Published

on

பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே அரசாங்கத்தை கவிழ்த்த விவகாரத்தில் ஆளுநர் குறித்து காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

#image_title

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆட்சியை கைப்பற்றினார் ஏக்நாத் ஷிண்டே. இந்த விவகாரத்தில் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடித்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உத்தவ் தாக்கரே தரப்பில், ஒரு கட்சியின் கீழ் ஆட்சி இருக்கும் போது அதில் ஆளுநர் எப்படி தலையிடமுடியும். இதில் அப்பட்டமாக அரசியல் நடந்துள்ளது. திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளார்கள். ஆளுநர் சட்டமன்றத்தில் ஒரு அங்கம் மட்டும்தான். அவர் சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. அரசியல் கட்சியை தவிர வேறு யாரையும் அவரால் அங்கீகரிக்க முடியாது.

ஆளுநர் ஒரு கட்சியை தான் அங்கீகரித்து ஆட்சியமைக்க வாருங்கள் என அழைப்பு விடுக்க முடியும். பின்னர் எப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆட்சி அமைக்க வாருங்கள் என அழைப்பு விடுத்தார் என கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு வாதங்களையும் கேட்டது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு.

பின்னர் ஆளுநர்கள் குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும். அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது என்றார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version