தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை: ஆளுனர் உரையின் முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் கவர்னர் சட்டப்பேரவையில் தனது உரையாற்றி வருகிறார்.

அவர் தனது உரையில் ’அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 60 சதவீதம் அளவிற்கு மகளிர்கள் பயணம் செய்துள்ளதாகவும் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை இன்னும் விடுவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெருமழை காரணமாக சென்னை சந்தித்தபோது அணைகளில் இருந்து சரியான நேரத்தில் சரியான அளவில் நீரை வெளியேற்றி இயற்கை சீற்றத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிறப்பாகக் கையாண்டார் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 12ஆம் தேதி உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயர் கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்தார். தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நாட்டிலேயே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயித்து தமிழக முதல்வர் செயல்படுகிறார் என்றும் கொரோனா மத்தியில் குறுகிய காலத்தில் தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் முதலமைச்சருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொள்கை வகுத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும், தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்றும் ஆளுனர் ஆர்.என்.ரவி மேலும் கூறினார்.

தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து ஜாதியினரும் தமிழ்நாடு அரசு அர்ச்சகராக்கி உள்ளது என்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதன் மூலம் அவர்களது வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது என்றும் தமிழ்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்களில் பாடப்பட்டு வருகிறது என்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version