செய்திகள்

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published

on

சென்னை தொலைக்காட்சி பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் “திராவிடம்” என்ற சொல்லைத் தவிர்த்த ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவிலும், சென்னை தொலைக்காட்சி பொன்விழாவிலும், ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும்போது, “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை நீக்கியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கடும் கண்டனத்தில், “திராவிடம்” என்ற சொல்லை நீக்குவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகவும், ஆளுநர் ரவியின் நடவடிக்கை அவரின் பதவிக்கு தகுதி இல்லாதவனாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருமைப்பாட்டையும் அவமதிக்கும் செயலாக இதை குற்றம்சாட்டினார்.

ஆளுநர் ஆர். என். ரவி நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் இந்தி கற்றல் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, அவரை உடனடியாக பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Poovizhi

Trending

Exit mobile version