Connect with us

தமிழ்நாடு

திரும்பப் பெற வேண்டும்… மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர்… சர்வாதிகாரி… முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

Published

on

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

CM Stalin 4 2

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூக கருத்துகளை பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவி பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு கவர்னருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

CM Stalin

இவை கவர்னரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் என்பது மிக மிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும். முதலில் ஏதோ உப்பு சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், ‘இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை’ என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று மத்திய மந்திரிகளே சொன்னபிறகும், அவர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக கவர்னரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

சட்டம் அறிந்தவர் போல் கருத்துகளை தெரிவித்து வரும் கவர்னருக்கு, அரசியலமைப்பு சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால், 17-10-2022 அன்று கவர்னராலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, சபாநாயகரால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை, அவர் தெரிந்தும் செய்துள்ளாரா? என்பதை பொதுமக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.

RN Ravi 1 2

இந்தநிலையில், தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் கவர்னர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார்.

ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.

Stalin met RN Ravi

மாநில அரசின் சுருக்கெழுத்து தான் கவர்னர். மத்திய அரசின் சுருக்கெழுத்து தான் ஜனாதிபதி’ என்று சுப்ரீம் கோர்ட்டே ஒரு வழக்கில் சுருக்கமாக சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டராக’ (பெரிய சர்வாதிகாரியாக) தன்னை கவர்னர் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை கவர்னர் அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால், அதனை அவரால் நிராகரிக்க முடியாது. எனவே, கவர்னர் கேட்ட விளக்கங்களை கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிர்வாகத்தை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.

Stalin

எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே கவர்னர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் கவர்னர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் கவர்னர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!