வணிகம்

பட்ஜெட் 2024: முறையாக வேலைக்கு சேரும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் அரசு வழங்கும்!

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை வருங்கால வைபு நிதி பங்களிப்பாக வழங்கும் என்று அறிவித்தார்.

இந்தத் திட்டம் அனைத்து துறைகளிலும் புதிதாக பணிக்குச் சேரும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். இது 210 லட்சம் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் என பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வேலை வாய்ப்புக்குப் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை என்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனால் கூட்டணி கடிசிகல் துணையில் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.

மேலும், 2024-25 யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதி அமைச்சர் மூன்று வேலைவாய்ப்பு இணைந்த திட்டங்களை அறிவித்தார்.

அவர் வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கத் தனியார் கூட்டமைப்புடன் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற விதைகளை உற்பத்தி செய்யும் தனியார் மற்றும் வல்லுநர்களுக்கு நிதி வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version