தமிழ்நாடு

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வா?

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் என்ற ஒரு ஆணையத்தை கடந்த அதிமுக ஆட்சி அமைத்தது என்பதும் இந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென நீதிமன்ற உத்தரவால் விசாரணை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்போலோ மருத்துவமனை தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது என்பதும் இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் சிடி செல்வம் ஆகியோர் கொண்ட ஆணையத்தை அமைக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து இரு நபர் ஆணையம் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version