தமிழ்நாடு

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடியில் மதிய உணவு: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறக்கப்படும் என்றும் குழந்தைகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அங்கன்வாடி மையங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக கிராம பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் உணவு வழங்கும் போது உணவு வழங்கும் ஊழியர்கள் மற்றும் உணவைப் பெற வரும் மாணவ-மாணவிகள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களுக்குகான வழிகாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

* காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது

* அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நெயில் பாலிஸ் செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது

* மூக்கு சொறிதல், கண் காது வாய் தேய்த்தல், எச்சில் துப்புதலை தவிர்க்க வேண்டும்

*அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

* இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை

seithichurul

Trending

Exit mobile version