வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 1234. இதில் கிராம சுகாதாரச் செவிலியர், துணை செவிலியர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம். இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 1234

வேலை: Village Health Nurse / Auxiliary Nurse Midwife

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத சுகாதாரப் பணியாளர் படிப்பான MHW முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்று 2 ஆண்டு Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:13.11.2019

Trending

Exit mobile version