வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் அரசு வேலை!

Published

on

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியிடங்கள் 53 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: கணினி இயக்குபவர் – 01
மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500
கல்வித்தகுதி: கணினி அறிவியலில் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது பி.ஏ, பி.காம் உடன் கணினியில் பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 07
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: நகல் பரிசோதகர், படிப்பாளர்
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 11
மாத சம்பளம்: ரூ.19,000 – 60,300
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 15
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: மசால்ஜி
காலியிடங்கள்: 06
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: பெருக்குபவர்
காலியிடங்கள்: 06
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 07
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்32க்குள்ளும், ஆதிதிராவிடப் பழங்குடியினர், அருந்ததியர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை கல்வித் தகுதியை விட அதிகக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர், கடலூர் மாவட்டம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் பெறுவது போன்ற முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/2019%20Notification%20Tamil_2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.06.2019

seithichurul

Trending

Exit mobile version