பர்சனல் ஃபினான்ஸ்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40% வரை மத்திய அரசு உயர்த்தியது!

Published

on

மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் , என்எஸ்சி உள்ளிட்ட பிற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

எனவே டெர்ம் டெபாசிட், பிபிஎப், என்எஸ்சி, தேசிய பென்ஷன் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதம் 01.07.2018 to 30.09.2018 வட்டி விகிதம் 01.10.2018 to 31.12.2018 கூட்டு இடைவெளி
சேமிப்பு கணக்கு 4 4 ஆண்டு
1 வருட டைம் டெபாசிட் 6.6 6.9 காலாண்டு
2 வருட டைம் டெபசிட் 6.7 7 காலாண்டு
3 வருட டைம் டெபாசிட் 6.9 7.2 காலாண்டு
5 வருட டைம் டெபாசி 7.4 7.8 காலாண்டு
5 வருட ரெக்கரிங் டெபாசிட் 6.9 7.3 காலாண்டு
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8.3 8.7 காலாண்டு
5 வருட மாத வருவாய் கணக்கு 7.3 7.7 மாதம்
5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் 7.6 8 ஆண்டு
பொது வருங்கால வைப்பு நிதி 7.6 8 ஆண்டு
கிசான் விகாஸ் பத்ரா 7.3 (முதிர்வு காலம் 118 மாதங்கள்) 7.7 (முதிர்வு காலம் 112 மாதங்கள்) ஆண்டு
சுகன்யா சம்ரிதி யோஜனா- செல்வ மகள் திட்டம் 8.1 8.5 ஆண்டு
(Source: Ministry of Finance)
seithichurul

Trending

Exit mobile version