தமிழ்நாடு

40 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ்: அரசாணை வெளியீடு

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

இந்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுகவும் ரூபாய் 1500 வழங்கப்படும் என்று அதிமுகவும் அறிவித்துள்ள நிலையில் இவை எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் இந்த அரசாணை வெளியிடலாமா என்ற ஒரு என்று ஒரு புறம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் இந்த அரசாணையை வெளியிடப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சியின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version