தமிழ்நாடு

ஜனவரி 28 பொதுவிடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு: காரணம் என்ன?

Published

on

தமிழர் பண்டிகையான தைப்பூச திருநாளிற்கு முதன் முதலாக பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரபலமானது தைப்பூச திருநாள் ஆகும். இந்த திருநாள் தை மதத்தில் பிறந்த பூச நட்சத்திரத்தை உடையவர்களுக்கு உகந்த நாளாக கருத்தைப்படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இந்நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம்.

பழனியில் தைப்பூச திருநாள் கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காவடியாட்டம், கும்மி, கரகம்  போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏழை எளிய மக்களுக்கு தன, தர்ம உதவிகளும் தைப்பூச திருநாளின் போது வழங்கப்படுகிறது. திருப்புகழ்  என்ற நூலில் தைப்பூச திருநாள் பற்றி கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தைப்பூச திருநாளை ஒட்டி ஜனவரி 86 தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.  பழனி மட்டும் இன்றி திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி கோயில்,திருத்தணி, பழமுதிர்சோலை என்று அறுபடைவீடுகளும் கோலகலமாக காட்சியளிக்கும். 

Trending

Exit mobile version