சினிமா செய்திகள்
ஜூலை 12ல் காவல் காக்க வருகிறான் கூர்கா!
காமெடி நடிகராக அறிமுகமான யோகிபாபுவும், ஹீரோவாக மாறிவிட்டார். அவர் எம தர்மனாக லீடு ரோலில் நடித்துள்ள தர்மபிரபு படம் இன்று திரைக்கு வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி அவர் ஹீரோவாக நடித்துள்ள கூர்கா படமும் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா மாடல் எலிஸா உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது.
வாட்ச்மேன் படத்தை போலவே, இந்த படத்திலும் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
மேலும், தணிக்கை குழு இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளதால், குடும்பமாக வந்து யோகிபாபுவின் படத்தை பார்த்து சிரித்து மகிழலாம்.