விமர்சனம்

மீண்டும் ஒரு மொக்கை படம் கொடுத்த ஜீவா? கொரில்லா விமர்சனம்!

Published

on

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கீ படம் எந்த அளவுக்கு மொக்கைப் படமாக வந்ததோ அதே போன்ற மற்றொரு மொக்கை படமாக கொரில்லா படத்தையும் ஜீவா கொடுத்து, தனது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளார்.

சிவா மனசுல சக்தி, கோ என மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஜீவா, தற்போது கதைகளை தேர்வு செய்வதில்லையா? அல்லது சரியான இயக்குநர்களை தேர்வு செய்வதில்லையா? என்பது புரியவில்லை.

கொரில்லா என்ற டைட்டிலுக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கொரில்லா என்ற டைட்டில் வைத்து விட்டதால், குரங்கு ஒன்றை காட்ட வேண்டும் என காட்டியிருப்பது, எரிச்சலைத் தான் தூண்டுகிறது.

திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற பழைய மாவில் இன்னும் எத்தனை தோசை தான் ஊற்றுவார்களோ?

செண்டிமெண்ட் டச்சுக்காக விவசாயக் கடன் ரத்து காட்சியை வைத்தாலும், அந்த விசயத்திற்காக மட்டும் இயக்குநரை பாராட்டலாம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் அப்படி நடித்த ஷாலினி ரெட்டியா இது என்று பல இடங்களில் கேட்கத் தோன்றும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் கூட்டணி இருந்தும் காமெடிக்கும் இந்த படத்தில் கடும் வறட்சி ஏற்பட்டிருப்பது தான் மிகப்பெரிய கொடுமை.

ஜீவாவுக்கு ஒரு ஹிட் படமாக அடுத்து வெளியாகும் ஜிப்ஸி படமாவது அமைய வேண்டும் என்பதே ஜீவா ரசிகளின் ஒரே பிரார்த்தனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாஜிக் இல்லை, காமெடி குறைவு, பாடல்கள் சுமார் ரகம், கதை டோட்டல் டேமேஜ் என மொத்தத்தில் இந்த படம் எந்த விதத்திலும் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக அமையாதது மிகப் பெரிய ஏமாற்றம்தான்.

சினி ரேட்டிங்: 2.25/5

seithichurul

Trending

Exit mobile version