உலகம்

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் டிஸ்மிஸ்: கூகுள் எச்சரிக்கை

Published

on

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் பல முறை தங்களது ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் தற்போது அதிரடியாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கூகுள் ஊழியர்கள் தடுப்பூசி குறித்த தங்களது நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் தவறினால் பணியை இழக்க நேரிடும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படும் என்ற பாணியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு காரணமாக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version