உலகம்

உடலில் உள்ள நோய்களை ஸ்மார்ட்போன் மூலம் கண்டறியலாம்.. கூகுள் அதிரடி திட்டம்!

Published

on

ஸ்மார்ட்போனில் உள்ள மைக், கேமரா உதவியுடன் உடலில் உள்ள நோய்களைக் கண்டறியும் புதிய மென்பொருளைக் கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், ஸ்மார்ட்போனில் உள்ள மைக் மூலமாக இதயத் துடிப்பை கண்டறிவது, இதய பிரச்சனைகளைக் கண்டறிவது எப்படி என ஆராய்ந்து வருகிறோம் என கூகுள் நிறுவன செயற்கை நுண்ணறிவு துறை இயக்குநர் ஜார்ஜ் கொராடோ கூறியுள்ளார்.

மேலும் ஸ்மார்ட்போனின் புகைப்படம் எடுத்து அதன் மூலம் சர்க்கரை அளவை கண்டறியவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அப்பிள் உள்ளிட்ட ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் உதவியுடன் இதயத் துடிப்பைக் கண்டறிவது, சர்க்கரை அளவை கண்டறியும் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆனால் ஸ்மார்ட் வாட்ச் அனைவரும் வாங்கக் கூடியதாக இல்லை. ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. அதில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் போது மக்களிடம் ஆரோக்கிய உணர்வு அதிகரிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version