உலகம்

மேப் சேவையை திடீரென நிறுத்திய கூகுள்: ரஷ்ய ராணுவம் அதிர்ச்சி!

Published

on

ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் கூகுள் மேப் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து உள்ள ரஷ்ய ராணுவம் கூகுள் மேப் மூலம் தான் அந்நாட்டில் உள்ள ராணுவ தளங்கள் முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை அறிந்து குறிவைத்து தாக்கி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாடு முழுவதும் கூகுள் மேப் சேவையையும் நிறுத்துகிறது. இதனால் கூகுள் மேப் மூலம் எந்தெந்த இடத்தில் உக்ரைன் ராணுவ தளவாடங்கள் இருக்கும் என்பதை அறிய முடியாத நிலை ரஷ்ய ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு அளித்துள்ள கூகுள் நிறுவனம் அந்நாட்டிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version