தொழில்நுட்பம்

Chat-GPT போட்டியாக பார்ட்.. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Published

on

இணைய உலகை Chat-GPT சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில், சென்ற ஆண்டு 6 ஆண்டுகளாகக் கூகுள் ஆராய்ச்சி செய்து வந்த செயற்கை நுண்ணறி தளமாக பார்ட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தான் செய்துள்ள வளைப்பதிவில் Chat-GPT என்றால் என்ன மற்றும் அதன் அடிப்படை செயல்பாடுகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

பார்ட் ஒர் சோதனை செயற்கை நுண்ணறிவு சாட் சேவையாகும். இது இருந்தால் உலகின் எந்த மொழியிலும் சாட் செய்து தகவல்களைப் பகிரலாம் மற்றும் அறிந்துகொள்ளலாம். அதற்காக நமக்கு அந்த மோழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கூகுளின் மொழி மாதிரி லாம்டா மூலம் இயக்கப்படுகிறது.

Chat-GPT-க்கும் கூகுளின் பார்டுக்கும் வித்தியாசம் என்னவென்றால் அது இணையத்திலிருந்து தகவலைப் பெற்று வழங்கும்.

பார்ட் உலகின் எவ்வளவு கடினமான தலைப்புகளையும் 9 வயது குழந்தைக்குச் சொன்னால் புரிந்துகொள்வது போல வழங்கும்.

கூகுளின் மொழி மாதிரி என அழைக்கப்படும் லாம்டாவின் மிதவை வடிவமே பார்ட். இதற்கு அதிக கணித திறன் தேவையில்லை. இதற்கு இப்போது உள் சோதனையுடன் சேர்த்து வெளிப்புற பின்னூட்டமும் தேவைப்படுகிறது.

நம்பிக்கை வாய்ந்த டெஸ்டர்களுக்கு வரும் வாரங்களில் பார்ட் சேவை கிடைக்கும். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்குமான பயன்பாட்டுக்கு பார்ட் வரும்.

மைக்ரோசாஃப்ட் தங்களது தேடு பொறியான பிங்கில் Chat-GPT-ஐ அறிமுகம் செய்ய உள்ள நிலையில், கூகுள் பார்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைக்ரொசாஃப்ட் நிறுவனம் Chat-GPT-ல் பெரும் முதலீடுகளைச் செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version