தொழில்நுட்பம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட செயலிகள் நீக்கம்.. காரணம் என்ன தெரியுமா?

Published

on

கடன் வழங்கும் செயலிககளை கூகுள் நிறுவனம் தனது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது கொள்கைக்கு முரணாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் செயல்களை அவ்வபோது களை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பயனர்களுக்கு கடன் வழங்கி, மிரட்டி லாபம் பெறும் சிறுசிறு செயலிகளை நீக்கியுள்ளது.

இந்த செயலிகள் குறிப்பிட்ட அளவு வரையிலான தொகையை மிகஎளிதாக வழங்கி விடும். கடன் வழங்கப்படும் போதே பயனர்களின் மொபைல் எண்,கேமரா, எஸ்எம்எஸ் என அனைத்தையும் அணுகுவதற்கான அனுமதியையும் பயனர்களிடத்தில் கேட்கும். அதை பெரிதுபடுத்தாத பயனர்களோ செயலி கேட்கும் அணுகல் அனைத்திற்கும் அனுமதி வழங்கி விடுவர்.

இதனையடுத்து கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பல மிரட்டல்களையும், பயனர்களின் விவரங்களை வைத்து பொதுவெளியில் தரக்குறைவாக விளம்பரமும் செய்யும். இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் வெளிநாடுகளில் நடந்துள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் அதுபோல கிட்டத்தட்ட நூறு செயலிகள் இருப்பதாக தெரியவந்தது. இது கூகுளின் கவனத்திற்குச் செல்ல கடன் வழங்கும் குறிப்பிட்ட செயலிகளை அப்படியே நீக்கி விட்டது.

Trending

Exit mobile version