தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் கூகுள்: முதல்வருடன் ஒப்பந்தம்

Published

on

தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமைச் செயலாளர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த ஒப்பந்தத்தின்படி Google Read Along என்ற செயலியை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்த கூகுள் நிறுவனம் உதவி செய்யும். இதன் காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில் ஆங்கிலம்தான் என்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சர்வசாதாரணமாக ஆங்கிலம் பேசும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது திணறி வருகின்றனர். இந்த குறையைப் போக்குவதற்காக கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version