இந்தியா

கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு கூகுள் கொடுத்த மிகப்பெரிய தொகை!

Published

on

கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், கனடா, சீனா உள்பட பல நாடுகள் கை கொடுத்து வருகின்றன. இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்பட பல்வேறு பொருள்களை அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூபாய் 135 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. யுனிசெப் மூலமாக இந்தியாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். ரூ.135 கோடி மதிப்பிலான இந்த மருந்து பொருள்கள் விரைவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version