தொழில்நுட்பம்

கூகுளின் ‘கூகுள் பிக்சல் 6ஏ’ புதிய மொபைல் போன்: என்னென்ன அம்சங்கள்?

Published

on

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மொபைல் சீரிஸில் அடுத்த மாடலாக தற்போது கூகுள் பிக்சல் 6ஏ என்ற மாடல் மொபைல் போன் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் செயலியுடன் செயல்படும்.

கூகுள் பிக்சல் 6a மொபைல் போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டது. 6.1-இன்ச் முழு-HD டிஸ்ப்ளேவை கொண்ட இந்த போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் கூகுள் டென்சர் SoC மூலம் இயக்கப்படும் இந்த மொபைலில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் 12.2 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

28ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 5ஜி, வைபை மற்றும் யூஎஸ்பி சி போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளது. இந்த மாடல் வரும் ஜூலை மாதம் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அனேகமாக 40,000 ரூபாய் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version